மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவல் நீட்டிப்பு! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal



டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி காட்சி மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது. 

மேலும் மணி சிசோடியா மீது அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மீக ஆட்சி சார்பில் பிரசாரம் செய்வதற்காக மணீஷ் சிசோடியா இடைக்கால ஜாமின் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. டெல்லி உயர் நீதிமன்றம் மணி சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனுவை நிராகரித்து கடந்த 20ஆம் தேதி உத்தரவிட்டது. 

இந்நிலையில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து வருகின்ற ஜூலை 6ஆம் தேதி வரை அவரது நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manish Sisodia court custody extension


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->