தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகள் வனப்பகுதியில் போலீசுடன் மோதல்: 7 பேர் கொல்லப்பட்டனர்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டம், ஏதூர் நகரம் அருகே உள்ள சல் பாகா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அதிகப்படியாக நடமாட்டம் கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகின.

அப்பகுதி மக்கள், கிரே ஹவுன்ட்ஸ் மற்றும் மாவோயிஸ்டு எதிர்ப்பு படையினருக்கு இந்நடமாட்டத்தைத் தெரிவித்து உதவியுள்ளனர்.

இதையடுத்து, மாவோயிஸ்டு எதிர்ப்பு படையினரும் கிரே வரவுன்ட்ஸ் போலீசாரும் இணைந்து வனப்பகுதியில் அதிரடி வேட்டையை ஆரம்பித்தனர்.

அப்போது, அடர்ந்த காட்டுக்குள் போலீசாரை கண்ட மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் திடீர் தாக்குதல் நடத்தின. போலீசாரும் மறுமொழியாக எதிர் தாக்குதல் மேற்கொண்டு, இந்த மோதலில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

போலீசாரின் தகவலின் படி, கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் முக்கிய தலைவர்களும் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, உள்ளூர் சமூகத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அரசுப் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maoists clash with police in Telangana forest 7 killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->