அசைவ உணவால் வந்த வினை - நடுபாதியில் நின்ற திருமணம்.!
marriage stopped for no non veg food in uttar pradesh
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள டியோரியா மாவட்டம் ஆனந்த் நகர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் சர்மா மகள் சுஷ்மா. இவருக்கும், அபிஷேக் சர்மா என்ற நபருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன் படி இவராது திருமணம் கடந்த வியாழக்கிழமை நடைபெறவிருந்தது.
இதனையொட்டி திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த நிலையில் மணமகள் வீட்டில் திருமண விருந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட்டது. அசைவ உணவு வைக்கப்படவில்லை.
இது குறித்து மணமகன் குடும்பத்தினர் மணமகள் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறிது நேரத்தில் இந்த வாக்குமூலம் பெரிதாகியதை அடுத்து மணமகளின் தந்தையான தினேஷ் சர்மாவை மணமகனின் தந்தை சுரேந்திர சர்மா தனது உறவினர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதனால் , இருவீட்டாருக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, மணமகனின் குடும்பத்தினர் மீது மணமகளின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் மணமகன் குடும்பத்தினர் 5 லட்ச ரூபாய் வரதட்சணையாக பெற்றதாகவும், அவைச உணவு பரிமாறவில்லை என்பதால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண விருந்தில் மீன், இறைச்சி அசைவ உணவு இல்லாததால் திருமணம் நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
marriage stopped for no non veg food in uttar pradesh