திருமணமான பெண்கள் இணையத்தில் அதிகமாக தேடுவது என்ன தெரியுமா.? வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


முன்பெல்லாம் நமக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் முதலில் வயது முதியவர்களிடம் கேட்போம். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் ஏதாவது சந்தேகம் அல்லது தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கூகுளை தான் நாடுகின்றோம். 

அதன்படி நாம் தேடும் ஒவ்வொரு சிறிய விவரங்களை கூட அதனுடைய சர்வரில் சேமிக்கப்படும். தற்போதைய சூழலில் கூகுள் வலைதளங்களில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியல் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும். இவை தனித்தனி வகைகளாக பிரிக்கப்பட்டு இந்த தேடுதல் குறித்த தகவல்களை சில ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில் தற்போது கூகுள் வலைதளத்தில் திருமணமான பெண்கள் என்ன தேடுகிறார்கள்? என்ற ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வகையில், திருமணமான பெண்கள் தங்கள் கணவரை திருப்திப்படுத்துவது குறித்து கூகுளில் அதிகம் தேடுகின்றனர் என்று சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் பெண்கள், தனது கணவரை கையாள்வது எப்படி.? கணவருக்கு மிகவும் பிடித்தது என்ன.?வேலையையும், குடும்பத்தையும் எப்படி சமாளிப்பது? போன்ற சந்தேகங்களை கூகுளில் அதிகமாக தேடியுள்ளனர்.

மேலும், குடும்பக் கட்டுப்பாடு எப்போது செய்ய வேண்டும்? குழந்தை பிறக்க சரியான நேரம் எது? போன்ற கேள்விகளையும் திருமணமான பெண்கள் கூகுளில் தேடுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Married women most search in google 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->