மத்திய பிரதேசம் || உலகிலேயே முதல்முறையாக மிதக்கும் சூரிய மின் நிலையம்.!
matya pradesh world first floting Solar power station
மத்திய பிரதேச மாநிலம் காந்துவா பகுதியில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் அமைக்கப்பட இருப்பதாகவும், இந்த மின்சார நிலையத்தில் 2022- 23ஆம் ஆண்டில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டு உள்ளதாகவும், நர்மதை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஓம்காரேஷ்வர் அணையில் இந்த மிதக்கும் மின்சார நிலையம் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் சஞ்சய் துபே அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது,
' உலகின் மிகப்பெரிய இந்த மிதக்கும் சூரிய மின் நிலையம் நர்மதை ஆற்றின் குறுக்கே உள்ள ஓம்காரேஷ்வர் அணையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக முதலில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இந்த மின் நிலையத்தில் இருந்து 2022-23 ஆம் ஆண்டுக்குள் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதற்கான டெண்டர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். சூரிய மின் நிலையம் அமைக்க இந்த இடம் மிகவும் பொருத்தமாக இருப்பதால், உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் அமைப்பதில் பெருமை கொள்கிறோம்.
ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் ஹைடல் பகுதியில், தெர்மல் முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, சூரிய வெப்பம் முறையிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளதால் மொத்தமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்' என்று சஞ்சய் துபே தெரிவித்துள்ளார்.
English Summary
matya pradesh world first floting Solar power station