தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்கள் தானே? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - வைகோ ஆவேசம்.!
mdmk leader vaiko speech about tn fishermans arrest
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவரின் படகில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் கடந்த வாரம் மீனவர் ஒருவர் உயிரிழந்து, ஒருவர் காணாமலும் போயுள்ளனர். தற்போது தமிழக மீனவர்கள் 70 பேர் இலங்கை சிறையில் இருக்கிறார்கள். இலங்கை ராணுவம் பறிமுதல் செய்த 170 படகுகளையும் இதுவரை திருப்பி தரவில்லை.
ஆகவே சிறையில் இருக்கும் மீனவர்களையும், இலங்கை கட்டுப்பாட்டில் இருக்கும் 170 படகுகளையும் மீட்கவும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்றும் மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ கையில் கட்டுடன் மாநிலங்களவையில் தமிழக மீனவர் பிரச்சனையை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:- "தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. தற்போதும் தமிழக மீனவர்கள் 83 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் தமிழக மீனவரின் படகில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் காணாமல்போயுள்ளார்.
தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்கள் தானே? இந்திய குடிமக்கள் எனில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கு பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
English Summary
mdmk leader vaiko speech about tn fishermans arrest