இந்தியர்களே.. ஈரான், இஸ்ரேல் போர் அபாயம்.. வெளியுறவுத்துறை எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியூர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஆபத்தான சூழல் நிலவுவதால் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக தெஹ்ரான் அல்லது டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகத்தை தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது எனவும், பதட்டமான பகுதியில் வசித்து வரும் இந்தியர்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறும் அனைவரும் விழிப்புடன் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்தித்தபோது "சிரியாவில் ஈரானிய தூதரக வளாகங்கள் மீது கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் கவலை அளிக்கிறது .மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து  அதிகரித்து வரும் பதற்றங்கள் வேதனை அளிக்கிறது. பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்ட இந்தியா உறுதியாக நிற்கும்" என தெரிவித்துள்ளார்‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mea issue waring in Israel Iran war Indians avoid travel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->