தீவிரம் அடையும் தட்டம்மை நோய்! 1,250 பேர் மருத்துவமனையில் அனுமதி! மக்களே உஷார்! - Seithipunal
Seithipunal


மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தட்டம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. மும்பையில் உள்ள கோவண்டி பகுதியில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று மும்பையில் எட்டு பேரும், புறநகர் பகுதியான பிவாண்டியில் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதனை அடுத்து மும்பை மாநகராட்சியின் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தட்டம்மை நோய் தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்பொழுது மும்பையில் மட்டும் தட்டம்மை நோய் அறிகுறிகளுடன் 1256 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 164 பேருக்கு தட்டம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கே தட்டம்மை நோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மும்பைக்கு வந்து ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளனர். இந்த நோயின் தாக்கம் மும்பை தவிர்த்து மகாராஷ்டிரா முழுவதும் அதிகமாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரியுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். 

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குடிசைப் பகுதியில் உள்ள வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தட்டம்மை, நிமோனியா போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு எளிதில் வரக்கூடும்.

தட்டம்மை நோய் எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடியது. இந்த நோய் தொற்று ஏற்பட்டால் ஆரம்பத்தில் காய்ச்சல் மற்றும் இருமல் இருக்கும். அதன் பிறகு உடலில் சொறி உருவாகும். சொறி உருவாகும் முன்பே இந்த நோய் ஏற்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ தொடங்கும்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Measles epidemic among children in Mumbai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->