மும்பையை தொடர்ந்து கேரளாவிலும் தட்டம்மை நோய் பரவல்! தமிழக மக்களே உஷார்! - Seithipunal
Seithipunal


மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தட்டம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மும்பைக்கு வந்து ஆய்வு செய்து விட்டு சென்றனர். இந்த நோயின் தாக்கம் மும்பை தவிர்த்து மகாராஷ்டிரா முழுவதும் அதிகமாக காணப்படுவதாக தெரியவந்தது.

இது நிலையில் தற்போது தட்டம்மை நோய் கேரள மாநிலத்திலும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 160 பேருக்கு தட்டம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தட்டம்மை நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் கேரள சுகாதார துறை ஈடுபட்டு வருகிறது. 

மகாராஷ்டிராவில் பரவிய தட்டமையின் நோய் தற்பொழுது கேரளாவில் பரவ தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நோய் காற்றின் மூலம் பரவக்கூடியது என்பதால் நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும். எனவே கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகமும் தட்டம்மை நோய்க்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Measles has started to spread in Kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->