நீட் முறைகேடு: குஜராத்தில் சிபிஐ விசாரணை.. சிக்கும் மருத்துவ மாணவர்கள்..! - Seithipunal
Seithipunal



இந்த ஆண்டு கடந்த மே 5ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. ஆனால் அந்த தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்ததையடுத்து, மத்திய அரசு இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பீகார் மாநிலத்திற்கு விசாரணைக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு பாட்னாவில் மணீஷ் குமார் மற்றும் அஷுதோஷ் குமார் என்ற இருவரை தேர்வுக்கு முன்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கியதாக கடந்த வியாழக் கிழமை கைது செய்துள்ளனர். 

இதையடுத்து ஜார்கண்டில் வினாத்தாள் கசிய விட்டதாக ஓயாஸிஸ் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேற்று முன்தினம் சிபிஐ கைது செய்துள்ளது. இப்பள்ளியின் முதல்வர் தான் தேசிய தேர்வு முகமையின் கண்காணிப்பாளராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று சிபிஐ அதிகாரிகள் குஜராத் மாநிலத்தில் தங்கள் சோதனையை தொடங்கியுள்ளனர். அதில் 4 இடங்களில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் ராஜஸ்தானில் உள்ள ஜாலாவர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த கல்லூரியின் சில மாணவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Medical Students Got Caught in NEET Malpractice in Gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->