#BREAKING | மேகாலயா மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? வெளியான கருத்து கணிப்பு முடிவுகள்! - Seithipunal
Seithipunal


மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயா மாநிலத்தில், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கட்சி 16 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 16 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஐ-பாஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாது என்று அந்த கருது கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஜீ நியூஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தேசிய மக்கள் கட்சி 21 முதல் 26 இடங்களை கைப்பற்றும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் 8 முதல் 13 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சி மூன்று முதல் ஆறு இடங்களை கைப்பற்றும் என்றும், பாரதிய ஜனதா 3 முதல் 11 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.

திரிபுரா : மொத்தம் 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் பாஜக 36 முதல் 45 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சி 6 முதல் 11 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், மாநில கட்சியான திப்புரா மோத்தா 9 முதல் 16 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் இந்தியா டுடே தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

ஐ-பாஸ் வெளியீட்டள்ள கருத்துக்கணிப்பில், பாஜக 31 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மாநில கட்சியான திப்புரா மோத்தா 14 இடங்களிலும், மற்ற கட்சிகள் ஒரு இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meghalaya election 2023 exit poll


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->