மேக்கேதாட்டு அணை விவகாரம்: உறுதியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா! - Seithipunal
Seithipunal


காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபையில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை அந்த மாநில முதல்வரும், நிதி அமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்தார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ளது. முறையான அனுமதி பெற்று விரைவில் பணிகள் தொடங்கும். 

மேக்கேதாட்டு அணை கட்ட உருவாக்கப்பட்ட சிறப்பு குழுக்களின் 2 துணை குழுக்கள் செயல்பட்டு நீர் செல்லும் நிலப்பரப்புகள், வெட்டப்பட வேண்டிய மரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்துள்ளது என தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு, கடந்த கர்நாடகா பட்ஜெட் தொடரிலேயே அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mekedattu dam issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->