மேகதாது அணைக்கு அனுமதியில்லை - மத்திய அரசு தகவல்! - Seithipunal
Seithipunal


மேகாதுவின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதியில்லை என்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு, மத்திய அரசின் நீர்வலைத் துறை தரப்பில் இந்த பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.9000 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது.

அப்படி இந்த அணை கட்டப்பட்டால் சுமார் 67 டிஎம்சி நீர் வரை தேக்கி வைக்க முடியும். அதே சமயத்தில் இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு கிடைக்க கூடிய உபரி நீர் கிடைக்காமல், தமிழக விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளார்கள் என்று, தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இதற்கிடையே கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த கர்நாடக மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர், மேகத்தாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகத்திற்கு கிடையே சுமூகமான தீர்வுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

இந்த சூழ்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கர்நாடக மாநில அரசால் தயாரிக்கப்பட்ட மேகத்தாட்டு அணைக்கான விரிவான திட்டத்திற்கு மத்திய அரசு ஏதேனும் ஒப்புதல் அளித்துள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய அரசின் நீர்வளத்துறை அளித்துள்ள பதிலில், தற்போது வரை காவிரி ஆறு குறுக்கே அணை கட்டுவதற்கான எந்தவித அனுமதியும் கர்நாடக மாநில அரசுக்கு வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mekedatu Dam Karnataka RTI Central Govt reply


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->