பிரதமர் மோடிக்கு பில் கேட்ஸ் சொன்ன செய்தி! இது வேற லெவல் செய்தி! - Seithipunal
Seithipunal


பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி சமன் செய்துள்ளார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா, நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் பதவியேற்று வருகின்றனர். அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

மத்திய அமைச்சரவையில் நாட்டின் 24 மாநிலங்களை சேர்ந்த பிரதமர் உள்பட மொத்தம் 72 இடம் பெற்று உள்ளனர். பாஜகவின் கூட்டணி கட்சிகாலை சேர்ந்தவர்களுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

குறிப்பாக பாஜகவின் நட்பு கட்சியாக அறியப்படும் லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

இந்நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மூன்றாவது  முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு என் வாழ்த்துகள். 

பெண்கள் தலைமையிலான மேம்பாடு, சுகாதாரம், விவசாயம், டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளில் உலகளாவிய முன்னேற்றத்திற்கான புதுமைக்கான ஆதாரமாக இந்தியாவின் நிலையை நீங்கள் பலப்படுத்தி உள்ளீர்கள். 

இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு தொடர்ச்சியான கூட்டாண்மையை நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Microsoft Bill Gates wish PM Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->