மைக்ரோசாப்ட் குளறுபடி: பயம் வேண்டாம்! மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் போட்ட டிவிட்! - Seithipunal
Seithipunal


மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி குறித்து, மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களுக்கு இன்று புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த முதற்கட்ட தகவல்படி, விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த பிரச்னையை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுவரை பயனர்கள் தாங்களாகவே இதனை சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தகவல் மையத்தின் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை. குளறுபடிக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேசிய பங்குச்சந்தை மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடங்கியதால் எந்த பாதிப்பும் இல்லை" என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Microsoft Windows issue Union minister Ashwini Vaishnav 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->