என் மகளை மிரட்டரியா? நடு வானில் நடந்த வாய் சண்டை! வைரலாகும் வீடியோ!
mid air argument video shard social media
நடுவானில் பயணிகள் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது:
கடந்த 25-ந்தேதி மும்பையில் இருந்து டேராடூன் சென்ற விமானத்தில் ஒருவரது மகளை மிரட்டியதால், அவர் சக பயணியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதில், எனது மகளை எவ்வளவு தைரியம் இருந்தால் மிரட்டுவாய் என ஆத்திரமடைந்த இரண்டு பணிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அந்த பயணிகளை விமான பணி பெண்கள் சமாதானபடுத்தினர்.
இது தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனமான விஸ்தாராவின் சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில், ''யுகே 852 என்ற விஸ்தாரா விமானம் மும்பையில் இருந்து டேராடூனுக்கு செல்லும் போது இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த பிரச்சனையில் விமான பணி பெண்கள் தலையிட்டு தீர்த்து வைத்தனர். அதனை அடுத்து மீதமுள்ள பயணம் அவர்களுக்கு சுமூகமாக அமைந்தது'' என, கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை 27 விநாடிகள் கொண்ட வீடியோவாக பதிவு செய்த ஒரு பயணி சமூக வலைத்தளங்களில் வெளியிடவே, தற்போது அது வைரலாகி வருகிறது.
English Summary
mid air argument video shard social media