உல்லாச வீடியோவை காட்டி கோடிகணக்கில் பணம் பறிப்பு ..விசாரணையில் அதிர்ந்த போலீசார்!
Millions of rupees were extorted by showing the video The police are shocked at the investigation
கர்நாடக மாநிலம் சாமராஜ்பேட்டை தேவன ஹள்ளி பகுதியை சேர்ந்த மோகன்ககுமாருக்கும் அந்தபகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து மோகன்குமார் அந்த பெண்ணை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவுக்கு அடிக்கடி அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்து உள்ளார்.
அப்போது மோகன்குமார், அந்த பெண்ணுக்கு தெரியாமல் உல்லாச காட்சிகளை செல்போனில் ரகசியமாக எடுத்து அந்த பெண்ணிடம் உனது உல்லாச காட்சிகள் என்னிடம் இருக்கிறது என மிரட்டி அடிக்கடிபணம் பெற்று வந்துள்ளான்.மேலும்அந்த பெண்ணை மிரட்டி நகைகள், இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றை வாங்கி மோகன்குமார் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
ஒருகட்டத்தில் தொடர்ந்து பணம் கேட்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்குக்கு பல்வேறு முறை பணத்தை அனுப்பியதும், அந்த கணக்கில் இருந்து மோகன்குமாரின் வங்கி கணக்குக்கு சென்றதும் தெரியவந்தது.
காதலிக்கிறேன் என்று கூறி மோகன் குமார் இளம் பெண்ணை ஏமாற்றி அவரிடம் ஒன்றாக இருந்த வீடியோக்களை காட்டி மிரட்டி இதுவரை ரூ. 2 கோடியே 57 லட்சத்தை பறித்து உள்ளார். இதையடுத்து மோகன்குமார் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து ரூ.80 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
English Summary
Millions of rupees were extorted by showing the video The police are shocked at the investigation