அடுத்தடுத்து அட்மிட் ஆகும் அமைச்சர்கள் - பரபரப்பில் அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென காய்ச்சல் அதிகரித்தது. 

இதையடுத்து, அமைச்சர் பெய்ய சாமி சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் பெரியசாமி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister i periyasamy admitted hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->