'தமிழக மீனவர் பிரச்சனை 1974 மற்றும் 1976-இல் எடுக்கப்பட்ட முடிவுகளே மூல காரணம்'; அமைச்சர் ஜெய்சங்கர்..! - Seithipunal
Seithipunal


மீனவர் பிரச்னை தொடர்பாக ராஜ்யசபாவில்  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு கடந்த 1974 மற்றும் 1976-இல் எடுக்கப்பட்ட முடிவுகளே மூலகாரணம்'', என்று கூறியுள்ளார்.

அத்துடன்,  நேற்று வரை இலங்கை சிறைகளில் 86 இந்திய மீனவர்கள் இருந்தனர். இன்று 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 97 பேர் அந்நாட்டு சிறையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 83 பேர் இலங்கை சிறைகளில் தண்டனை அனுபவித்து வருவதாகவும், 03 பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றதாவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  தண்டனை அனுபவிப்பவர்களில் பலர் படகு உரிமையாளர்கள் அல்லது மீண்டும், மீண்டும் ஒரே குற்றத்தில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். இதனை கையாள்வது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 1974-இல் அப்போது மத்தியில் இருந்த அரசு, மாநில அரசுடன் ஆலோசித்து சர்வதேச கடல் எல்லையை வரையறுத்த போது தான் இந்த பிரச்னை தொடங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.  1976-இல் மீன் பிடிப்பது தொடர்பாக எல்லை வரையறை தொடர்பான கடித பரிமாற்றம் நடந்தது எனவும், எனவே 1974 மற்றும் 1976-இல் எடுக்கப்பட்ட முடிவுகளே தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு மூல காரணமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய மீனவர் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறோம் என்றும் இவ்வாறு ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Jaishankar says the root cause of the Tamil Nadu fishermens problem is the decisions taken in 1974 and 1976


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->