Wild fire!!! புஷ்பாவின் அடுத்த பட அப்டேட்!!! டைரக்டர் யார் தெரியுமா?
allu arjun next film update know who director
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தெலுங்கு திரையுலக நடிகர் 'அல்லு அர்ஜுன்'. இவர் புஷ்பா தி ரைஸ் மற்றும் புஷ்பா தி ரூல் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானார். மேலும் புஷ்பா தி ரைஸ் முதல் பாகம் படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

மேலும் புஷ்பா இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.தற்போது ரசிகர்கள் அனைவரது பார்வையும் அவரது அடுத்த படத்தின் மீதுள்ளது.
அவ்வகையில், அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில், அட்லீயின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது, அட்லீயின் இயக்கத்தில் வெளியான 'மெர்சல், பிகில், ஜவான்' ஆகிய படங்களைப் போன்றே அல்லு அர்ஜுன் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார்.
இந்த புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள், அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான வருகிற ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.இது தற்போது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகமாக ஏற்படுத்தியுள்ளது.
English Summary
allu arjun next film update know who director