இனி வருமான வரியை அமைச்சர்களே செலுத்த வேண்டும் - மணிலா அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமைச்சர்களின் வருமான வரியை இனி மேல் அமைச்சர்களே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1972 ம் ஆண்டு அமைச்சர்களின் வருமான வரியை அரசே செலுத்தும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கடந்த 52 ஆண்டுகளாக, முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வருமான வரியை அரசே செலுத்தி வந்தது. இந்த திட்டத்திற்கு மாநில அரசு இன்று முடிவு கட்டியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கடந்த 1972 ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்வது என்றும், இனிமேல் அமைச்சர்களே, தங்களது சம்பளத்தில் இருந்து அவர்களது வருமான வரியை செலுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. 

 

இந்த நாள் வரை அமைச்சர்களின் வருமான வரியை செலுத்துவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்ட நிலையில், மாநில அரசின் இந்த புதிய முடிவால், அந்த பணம் மிச்சமாகும் என்று கருதப்படுகிறது.

மேலும், கடந்த 2023 -24 நிதியாண்டில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்களின் வருமான வரியை செலுத்த ரூ.79 லட்சம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இதற்காக ரூ.3.5 கோடி செலவானதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ministers paid income tax bill madhya pradesh government order


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->