பிரதமர் மோடி பிறந்தநாள் - அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தின் முதலமைச்சரும், நாட்டின் பிரதமருமான நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

'

பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளோடு இருக்க பிரார்த்திக்கிறேன்,' என்றுத் தெரிவித்துள்ளார். இதேபோல், முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin and vijay wish to pm modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->