ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி..! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் இன்று மாலை 7.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஸ்ரீநகரில் இருந்து வடக்கே 130 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது . அதே போல லடாக் யூனியன் பிரதேசத்தில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடம் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். இந்த நடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விபரங்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moderate earthquake in Jammu and Kashmir


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->