ரயில் விபத்துக்கு மோடியின் பத்தாண்டு கால தவறானஆட்சி நிர்வாகமே காரணம் - மல்லிகார்ஜுனா கார்கே! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க ரயில் விபத்துக்கு மோடியின் பத்தாண்டு கால தவறான ஆட்சி நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் காயம் அடைந்துள்ளதாவும் மீட் பண்ணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காலமடைந்துள்ளனர். இந்த விபத்து செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து காட்சிகளை பார்க்கும்போது மன வேதனையாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரம் நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான ஏற்பாடு வழங்கப்பட வேண்டும்.

பத்து ஆண்டுகளில் மோடி அரசு ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிறுவகித்து உள்ளது. சுய விளம்பரத்திற்காக மேடையாக கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக சட்டத்துமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றி விட்டது. இந்திய ரயில்வே பை கைவிட்ட குற்றத்தை இழத்தைமோடி அரசை எதற்கு பொறுப்பு ஏற்க செய்வோம் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi 10 years of misgovernance is to blame for the train wreck Mallikarjuna Kharge


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->