நீட் தேர்வு சர்ச்சையில் மோடி வழக்கம்போல் மவுனம் சாதிக்கிறார் - ராகுல் காந்தி!!
Modi remains silent as usual on NEET exam controversy Rahul Gandhi
நீட் தேர்வு சர்ச்சையில் மோடி வழக்கம்போல் மவுனம் சாதிக்கிறார். மோடி ஆட்சியில் வினாத்தாள் கசிவு மையமாக மாறிவிட்டது என்ன ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஆண்டு வெளியான நீட் தேர்வு முடிவில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720க்கு 720 எடுத்தது பெரும் சர்ச்சை ஆனது. அது மட்டுமில்லாமல் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏழு பேர் முதல் மதிப்பெண் பெற்றிருந்தது வினாத்தாள் கசிவு ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை உருவாக்கியது. இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு சர்ச்சை பூதாகாரமாக வெடித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்த்தும் முறைகேடுகள் நடந்ததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீட் தேர்வில் 0.001% அலட்சியம் கூட இருக்கக் கூடாது. அதுபோன்று அலட்சியங்கள் இருப்பதாக தெரிய வந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் வழக்கை ஜூலை 8ஆம் தேதிக்கு ஓத்திவைத்தனர்.
வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, நீட் தேர்வில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் விவகாரத்தில் நரேந்திர மோடி எப்போது போல் மௌனம் சாதித்து வருகிறார்.
பீகார், குஜராத் மற்றும் மரியானாவில் நடந்த கருத்துகள் நீட் தேர்வில் ஓ எல் நடைபெற்று இருப்பது தெளிவாக காட்டுகின்றன. மேலும் இந்த பாஜக ஆட்சியில் இந்தமாநிலங்கள் வினாத்தாள் கசிவின் மையமாக மாறிவிட்டன.
வினாத்தாள் கசிவதை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என்று அதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்துள்ளோம்.
எதிர்க்கட்சியின் பொறுப்பை நிறைவேற்றி நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் குரலை தெருமுனை முதல் பாராளுமன்றம் வரை வலுவாக எழுப்பி அரசுக்கு அழுத்தம் கொடுத்து இது போன்ற கடுமையான கொள்கைகளை வகுப்பதில் உறுதியாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.
English Summary
Modi remains silent as usual on NEET exam controversy Rahul Gandhi