இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் - பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் 'ரோஜ்கார் மேளா' (வேலைவாய்ப்பு கண்காட்சி) இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியில் காணொலி காட்சி மூலமாக பங்கேற்ற பிரதமர் மோடி சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார். 

பின்பு அவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, நீங்கள் அனைவரும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக பணியாற்றப் போகிறீர்கள். உங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. உங்களுக்கான இந்த வாய்ப்பு ஒரு சிறப்பான தருணத்தில் கிடைத்திருக்கிறது. 

இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் உலக வல்லுநர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பால் இளைஞர்கள் பலன்களை பெறுகின்றனர். இந்தியாவில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. 

கொரோனா தொற்று மற்றும் போரால் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் உலகம் முழுவதும் சுணக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த காலம் தான் இந்தியா தனது பொருளாதார பலத்தை நிருபிப்பதற்கான பொன்னான காலம் என பொருளாதார அறிஞர்களும், நிபுணர்களும் தெரிவித்தனர். அமிர்த காலத்திற்குள் இந்தியா நுழைந்துள்ளது. 

மேலும் இந்த நேரத்தில் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். அந்த உறுதிமொழியை மெய்பிக்க நீங்கள் அனைவரும் தான் சாரதியாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

modi says Everyone should take commitment to make India a developed country


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->