முதன்மை செயலாளர் பதவி குறித்து பிரதமர் மோடி எடுத்து முடிவு என்ன? !!
modis decision about the office of principal secretary
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். தற்போது மக்களவை தர்தல் முந்து புதியதாக பதவியேற்ற பிறகு மோடி 3.0வில், அரசாங்க அதிகாரிகளில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி விசுவாசம் மற்றும் அனுபவம் ஆகியவற்றில் சிறந்த ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்த நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலையும், பிரதமரின் முதன்மை செயலாளராக பிகே மிஸ்ராவையும் மீண்டும் நியமித்து மோடி அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த இரண்டு பதவிகளும் பிரதமரின் பதவிக்கு இணையானவை என்பதால், அந்தந்த அலுவலகங்களில் பதவிகளை மேலும் தொடர , புதிய நியமன அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தந்த அலுவலகங்களில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டதன் மூலம், இந்த இரண்டு அதிகாரிகளும் அதிக காலம் NSA மற்றும் பிரதமரின் முதன்மை ஆலோசகர்களாக பணியாற்றியவர்கள் என கூறப்படுகிறது.
டாக்டர் மிஸ்ரா பிரதம மந்த்ரி அலுவலகத்தில் நிர்வாக விஷயங்களையும் நியமனங்களையும் தொடர்ந்து கையாளும் அதே வேளையில், தோவல் தேசிய பாதுகாப்பு, இராணுவ விவகாரங்கள் மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைக் கையாளுவார்.
கடந்த 1968ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தோவல், ராஜதந்திர சிந்தனை மற்றும் செயல்பாட்டுத் திட்டமிடல் ஆகியவற்றின் அரிய கலவையை பிரதமரிடம் கொண்டு செல்கிறார். அஜித் தோவல் ஒரு புகழ்பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அணுசக்தி விவகாரங்களில் நிபுணர்.
பி.கே.மிஸ்ரா 1972 ஆம் ஆண்டுபேட்ச் ஓய்வுபெற்ற அதிகாரி , இவர் இந்திய அரசாங்கத்தின் விவசாயச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் மோடியுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
டாக்டர் மிஸ்ரா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் இருவரும் பிரதமர் மோடியின் மிகவும் நம்பகமான உதவியாளர்களாகக் கருதப்படுகிறார்கள், இந்த இருவரும் 2014ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு அவருடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
English Summary
modis decision about the office of principal secretary