முஸ்லிம்களால் பராமரிக்கப்பட்டு வந்த பழமையான சிவன் கோவில் எரிந்து சாம்பலானது
mohinishwar shivalaya temple were burnt down
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் உள்ள 109 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற சிவன் கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஸ்ரீநகரில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள இந்த கோவில் குல்மார்க்கின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தெரியும். இந்த கோவிலில் பல படங்கள் படமாக்கப்பட்டது. காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறிய பிறகு, ஒரு முஸ்லீம் நபர் இந்த கோவிலை பராமரித்து வந்துள்ளார்.
குல்மார்க்கின் நடுவில் அமைந்துள்ள கோயில் காஷ்மீரின் கடைசி டோக்ரா ஆட்சியாளரான மஹாராஜா ஹரி சிங்கின் மனைவி மகாராணி மோகினி பாய் சிசோடியாவால் 1915 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. உள்ளூர் மக்கள் இதை ராணி மந்திர் என்றும் அழைக்கின்றனர். கோயிலைச் சுற்றிலும் கல் மற்றும் மரச் சுவர்கள் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறிய பிறகு, கோயிலைப் பராமரிக்க யாரும் இல்லை. பிறகு குல்மார்க்கைச் சேர்ந்த குலாம் ஷேக் முகமது கோவிலை பராமரித்து வந்தார். முஸ்லீமாக இருந்தாலும், கோயிலில் வழக்கமான வழிபாடு மற்றும் ஆரத்தி செய்வதுடன் அதை பராமரிக்க அனைத்து வேலைகளையும் செய்து வந்தார். கோவிலில் அவரது இத்தகைய பக்தி மற்றும் சேவையின் காரணமாக, அவர் முழு குல்மார்க் மற்றும் ஸ்ரீநகர் முழுவதும் பண்டிட் ஜி என்று அழைக்கப்படுகிறார். குலாம் ஷேக் வழிபாட்டு முறை, காலை ஆரத்தி போன்றவற்றைச் செய்து வந்தார். அனால் அவர் 2021ஆம் ஆண்டு கோயிலின் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு ஷார்ட் சர்க்யூட் தான் காரணம் என கூறப்படுகிறது. பலத்த காற்று வீசியதால் தீ வேகமாக பரவியாது, அதை தடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. அப்பகுதி மக்களும், போலீசாரும் முயன்றும் கோவிலை காப்பாற்ற முடியவில்லை.
மோகினேஷ்வர் சிவாலய கோவில் ஸ்ரீநகர் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரசித்தி பெற்றது. பல பாலிவுட் படங்களும் இங்கு படமாக்கப்பட்டன. ராஜேஷ் கண்ணா மற்றும் மும்தாஜின் சூப்பர்ஹிட் படமான 'ஆப்கி கசம்' படத்தின் புகழ்பெற்ற 'ஜெய் ஜெய் ஷிவ் சங்கர்' பாடலும் இங்கு படமாக்கப்பட்டது.
English Summary
mohinishwar shivalaya temple were burnt down