மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அலுவலகத்திற்கு பணம் கேட்டு மிரட்டல்.!  - Seithipunal
Seithipunal


மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் நிதின் கட்காரி. இவருடைய மக்கள் தொடர்பு அலுவலகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் ஆரஞ்சு சிட்டி மருத்துவமனை எதிரில் உள்ளது. 

இந்த நிலையில், இந்த அலுவலகத்திற்கு நேற்று காலை ஜெயேஷ் புஜாரி என்ற ஜெயேஷ் காந்தா என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு, ரூ.10 கோடி தரவேண்டும். அவ்வாறு பணம் கொடுக்காவிட்டால் நிதின் கட்காரி மீது தாக்குதல் நடத்துவேன் என்று மிரட்டியுள்ளார். 

இது தொடர்பாக அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, போலீசார் அலுவலகத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நாக்பூரில் உள்ள நிதின் கட்காரியின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேபோன்று கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி புஜாரி என்று கூறி ஒருவர் நிதின் கட்காரி அலுவலகத்திற்கு போன் செய்து ரூ.100 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். அவர் தாவூத் இப்ராகிம் கூட்டாளி என்று தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

money ask threat to union minister nitin gadkari office


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->