அதிகாலையில் சோகம் - வெந்நீர் எந்திரத்தில் விஷவாயு கசிந்து 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகர் மாவட்டம் ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபா மகன் திலீப். இவர் தொடர்ந்து பெய்து வரும் மழையால், வீட்டில் உள்ள கீசர் எனப்படும் வெந்நீர் எந்திரத்தில் தண்ணீரை சூடாக்கி குளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திலீப் நேற்று காலை வழக்கம்போல் வீட்டின் குளியல் அறைக்குள் சென்று கீசரை ஆன் செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஷோபா, மகனை தேடி குளியல் அறைக்குள் சென்றார்.

அங்கு திலீப் மயங்கிய நிலையில் தரையில் கிடந்துள்ளார். உடனே ஷோபா தனது மகனை குளியல் அறையில் இருந்து வெளியே கொண்டு வந்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து விட்டு தானும் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தாய், மகன் 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர், 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

 

அந்த விசாரணையில், வீட்டு குளியல் அறையில் இருந்த கீசர் எந்திரத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதும், இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திலீப்பும், அவரது தாய் ஷோபாவும் உயிரிழந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கீசர் எந்திரத்தில் விஷவாயு கசிந்து தாய், மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother and son died poison gas attack in karnataga


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->