சீனாவுக்கு உளவு பார்த்த 5 பேர் கைது..பிலிப்பைன்ஸ் அதிரடி!
Five arrested for spying for China Philippines in action
சீனாவை சேர்ந்த சிலர் தாங்கள் தைவான் நாட்டவர்கள் என்று கூறிக்கொண்டு பிலிப்பைன்சுக்கு சுற்றுலா சென்று சீனாவுக்கு உளவு பார்த்த 5பேரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.
தென்சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ்-சீனா இடையே சமீப காலமாக மோதல் போக்கு ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது.இதனால் தொடர்ந்து பதற்றம் நீடித்துவருகிறது.இந்தநிலையில் சீனாவைச் சேர்ந்த சிலர் தங்களை தைவான் நாட்டவர்களாக கூறிக்கொண்டு பிலிப்பைன்சுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது அந்த 5 பேரும் அங்குள்ள ஸ்ப்ட்ராட்லி தீவு அருகே சூரிய சக்தியில் இயங்கும் கேமராக்களை நிறுவி அவர்கள் கண்காணித்தனர்.
இதையடுத்து பின்னர் சந்தேகத்தின்பேரில் அந்த 5 பேரையும் போலீசார் அவர்களது ஆவணங்களை சோதனை செய்தபோது அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உளவு பார்த்ததாக கூறி 5 சீனர்களை பிலிப்பைன்ஸ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.பிலிப்பைன்சில் சீனாவுக்கு உளவு பார்த்த 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Five arrested for spying for China Philippines in action