கொடூரத்தின் உச்சம்; வரதட்சணை கொடுக்காத மருமகள்; உடலில் HIV வைரஸ்-ஐ செலுத்தி நோய் வர வைத்த கொடூர மாமியார்..!
Mother in law infected daughter in law with HIV virus for not paying dowry
வரதட்சணை கொடுமையின் ஒரு பகுதியாக 30 வயது மருமகளுக்கு, 56 வயதுடைய மாமியார் எச்.ஐ.வி. வைரஸ் ஊசியை செலுத்திய கொடூரம், உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தின் பிரன் காலியர் காவல் நிலையத்திற்கு உற்பட ஜஸ்ஸா வாலா கிராமத்தில் வசிக்கும் அபிஷேக் என்பவருடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த பிப்ரவரி 15, 2023 அன்று திருமணம் நடந்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/HIV 1-t6xsr.jpg)
இந்த திருமணத்தின் போது பெண்ணின் தகப்பனார் விலையுயர்ந்த கார், மற்றும் மகள் தனது மாமியார் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக, லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை வரதட்சணையாக கொடுத்துளார். அத்துடன் பெண்ணின் திருமணத்திற்கு சுமார் ரூ.45 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர், மீண்டும் ரூ.10 லட்சம் ரொக்கமும், மற்றொரு பெரிய எஸ்யூவி காரும் வரதட்சணையாக வேண்டும் என மருமகளை மாமியார் கேட்டு கொடுமை படுத்தியுள்ளார். பின்னர் இந்த விஷயம் பஞ்சாயத்தில் பேசி தீர்க்கப்பட்டிருக்கிறது.
![](https://img.seithipunal.com/media/HIV-zyfx4.jpg)
ஆனால், அதன் பின்னும் அடங்காத மாமியார் தனது மருமகளை, தொடர்ந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார். இதன் உச்ச கட்டமாக மருமகளுக்கு எச்.ஐ.வி தொற்று சிரிஞ்சை பயன்படுத்தி ஊசி ஏற்றி நோய்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதன் காரணமாக அந்த பெண்ணிற்கு உடல்நிலை வேகமாக மோசமடையத் தொடங்கியுள்ளது. பின்னர் மருத்துவ பரிசோதனையில் போது அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொடூரம் தொடர்பாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் கண்டுக்காமல் அலட்சியம் காட்டி உள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/HIV 2-yp3k4.jpg)
எனவே, இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தந்தையும் சஹாரன்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கின்றனர். பெண்ணின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் மாமியார், கணவர் உள்ளிட்ட உறவினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரப் பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், காங்கோ காவல் நிலையத்தில் பெண்ணின் கணவர், 02 மைத்துனர்கள் மற்றும் மாமியார் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 307 (கொலை முயற்சி), 498A (கணவர் அல்லது அவரது உறவினர்களால் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 328 (விஷம் மூலம் காயப்படுத்துதல்) மற்றும் தொடர்புடைய வரதட்சணை பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Mother in law infected daughter in law with HIV virus for not paying dowry