இனிமேல் வேலையில்லா இளைஞர்களை, வேலையில்லா இளைஞர்கள் என அழைக்கக்கூடாது; ம.பி. அரசு முடிவு..! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். உயர் படிப்பை முடித்தவர்கள் கூட வேலைக்கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு வேலை இல்லாத இளைஞர்களை வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் எனவும் தமிழில் இன்னும் சிலர் பல பெயர்களை கொண்டு அழைப்பர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் வேலையில்லா இளைஞர்களை வேலையில்லா இளைஞர்கள் (unemployed youth) என அழைக்கக்கூடாது என்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் (Aspirational Youth) என அழைக்க வேண்டும் என மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக போபாலைச் சேர்ந்த பிரகாஷ் சென் என்ற நபர் கூறுகையில் "நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். ஐ.டி. துறையில் நல்ல வேலை கிடைக்கும் என நினைத்தேன். ஆனால், கடுமையான போட்டியின் காரணமாக எனக்கு வேலை கிடைக்கவில்லை. கொரோனா ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு ஏராளமானவர்கள் வேலை இழந்து உள்ளனர். தற்போது டீ ஸ்டால் நடத்தி வருகிறேன்" என கவலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MP government decides not to call unemployed youths as unemployed youths from now on


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->