தேசியக் கொடியை அவமதித்த நெட்டிசன் மீது வழக்கு பதிவு.!! மத்திய பிரதேச போலீசார் அதிரடி.!!
MPpolice register case against Netizen for insulting national flag
மத்திய பிரதேசம் மாநிலம் சித்தி மாவட்ட பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞரின் மீது பாஜக பிரமுகரான பிரவேஷ் சுக்லா என்ற நபர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கண்டனங்கள் எழுந்தன.
இதை அடுத்து பாஜக பிரமுகரான பிரவேஷ் சுக்லா தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் பிர்வேஷ் சுக்லாவின் வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் புண்டோசர் மூலம் இடித்து தரை மட்டம் ஆக்கினர்
அதே வேளையில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பாதிக்கப்பட்ட நபரின் பாதங்களைக் கழுவியதோடு தனது வருத்தங்களையும் தெரிவித்தார். இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை செய்வதாக கூறப்படும் இஸ்லாமிய பெயர் கொண்ட ஷஃபிக் என்ற நபர் திமுகவுக்கு ஆதரவாக ட்விட்டரில் செயல்பட்டு வருகிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக நிர்வாகி பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்ததை இந்தியா மற்றும் தேசியக் கொடியின் மீது சிறுநீர் கழித்தது போன்று சித்தரித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதற்கு கடும் கண்டனம் எழுந்ததால் உடனடியாக அந்த பதிவை ஷஃபிக் நீக்கியுள்ளார். எனினும் அந்த பதிவில் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த ட்விட்டர் பதிவு தொடர்பாக மத்திய பிரதேச போலீசார் ஷஃபிக் என்ற பெயரில் ட்விட்டர் ஐடி உபயோகிக்கும் நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள போபால் போலீசார் "மூவர்ணக் கொடியை அவமதிக்கும் வகையில் சித்தி சிறுநீர் கழித்தல் சம்பவத்தின் படத்தை ஒருவர் பயன்படுத்தியதாக எங்களுக்கு புகார் வந்தது.
ஷஃபீக் 2.0 என்ற ட்விட்டர் கணக்கை பயன்படுத்துவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகள் 153A(1), 465, 469, 67 மற்றும் தேசிய மரியாதையை அவமதிப்பதை தடுப்பு சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என போபால் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
English Summary
MPpolice register case against Netizen for insulting national flag