₹20 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!! - Seithipunal
Seithipunal


ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு அவருடைய நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலில் "ரூ.20 கோடி தராவிட்டால் உங்களை கொன்று விடுவோம். இந்தியாவிலேயே மிகச்சிறந்த துப்பாக்கிச் சூடும் வீரர் எங்களிடம் உள்ளார்" என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விடுத்த கொலை மிரட்டலை அடுத்த அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mukesh Ambani was threatened for Rs20 crores


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->