திக் திக்.. விறுவிறுவென பரவும் ஓமைக்ரான் பாதிப்பு.. போடப்பட்ட 144 தடை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஓமைக்ரான் தொற்றால் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மும்பையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்டுள்ள ஓமைக்ரான் தொற்று 77 நாடுகளுக்கு தற்போது பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் ஓமைக்ரான் அலை வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று பரவத் துவங்கி உள்ளது. தற்போது வரை இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை 45 ஆக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை 28 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

எனவே, அந்த மாநிலத்தில் பொது இடங்களில் கூட்டம் கூட்ட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் வணிக வளாகங்கள் போன்ற கூட்டம் கூடும் இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியவராக இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாத வாடிக்கையாளர்கள் கடைக்குள் அனுமதிக்கக் கூடாது. என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai 144 action for Omicron infection


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->