மும்பை || உள்ளாடைகளில் மறைத்து கொண்டுவரப்பட்ட 5 கிலோ தங்கம்.! அதிரடி சோதனையில் சுங்கத்துறை..! - Seithipunal
Seithipunal


மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது துபாய் நாட்டிலிருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணி ஒருவர், தனது பெல்ட்டில் 9.895 கிலோ எடை கொண்ட தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 5 கோடியே 20 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, இந்த தங்கத்தை துபாய் விமான நிலையத்தில் இரண்டு சூடான் நாட்டவர்களிடம் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், மேலும் நான்கு பயணிகளிடம் இருந்து உள்ளாடைகளில் மறைத்து கொண்டு வரப்பட்ட 2 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5.101 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனை தொடர்ந்து மும்பையில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் செல்ல இருந்த இரண்டு பயணிகளிடம் இருந்து, பிஸ்கட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐக்கிய அரபு அமீரக பணமான 'திர்காம்' பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது  ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mumbai airport Customs Department chease 5kg gold


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->