ஆறு மணி நேரம் மூடப்படும் மும்பை விமான நிலையம்.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஆறு மணி நேரம் மூடப்படும் மும்பை விமான நிலையம்.! காரணம் என்ன?

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதற்காக வருகிற மே மாதம் இரண்டாம் தேதி ஆறு மணி நேரம் விமான நிலையம் மூடப்படும் என்று விமான நிலையத்திலிருந்து விமானப்படையினருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மே இரண்டாம் தேதி அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விமான நிலைய ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்படும். 

மாலை 5 மணிக்கு மேல் வழக்கம் போல் ஓடுபாதைகள் இயங்கும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை விமான நிலையத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mumbai airport temprory closed six hours for pre mansoon maintenance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->