அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்த மும்பை உயர்நீதிமன்றம் - நடந்தது என்ன?
mumbai high court fine to enforcement department
அமலாக்கத்துறையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராகேஷ் ஜெயின் என்பவர் மீது குல் அச்ரா என்பவர் பண மோசடி மற்றும் ஒப்பந்த மீறல் தொடர்பாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த விசாரணைக்கு எதிராக ராகேஷ் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மக்களை துன்புறுத்துவதன் மூலம் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முடியாது.
புலனாய்வு அமைப்புகள் சட்டத்தின் அளவுகோல்களுக்குள் நடந்துகொள்ள வேண்டும். அமலாக்க இயக்குனரகத்திற்கு ரூ.1 லட்சமும், ராகேஷ் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டதாகக் கூறி அவர் மீது புகார் அளித்த அச்ராவுக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
mumbai high court fine to enforcement department