அடேங்கப்பா அதிரடி தீர்ப்பு!!!குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த தேசிய புலனாய்வு நீதிமன்றம்...!!!
National Investigation Agency NIA has sentenced 5 people death bomb blast case
கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தெலுங்கானா ஐதராபாத்தில் தில்சுக்நகரில் கோனார்க் மற்றும் வெங்கடதிரி தியேட்டர்களில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் கொல்லப்பட்டு,130 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுதொடர்பான வழக்கு தேசிய புலானாய்வு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் யாஷின் பதக்கல் உள்பட 5 பேர் குற்றவாளிகள் என நீதிமாற்றம் தீர்ப்பளித்தது.
இந்த சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம், இந்திய முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான யாஷின் பதக்கல் மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஷியா உர் ரஹ்மான் மற்றும் 3 பேருக்கு மரணதண்டனை வழங்கில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யாஷின் பதக்கல் உள்பட 5 பேரும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு அங்கு நடந்து வந்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கே.லட்சுமணன், நீதிபதி பி.ஸ்ரீசுதா ஆகியோர் அடங்கிய அமர்வில், அவர்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
அதுமட்டுமின்றி, சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என உத்தரவிட்டது.
English Summary
National Investigation Agency NIA has sentenced 5 people death bomb blast case