மும்பையில் தாண்டவமாடும் தட்டம்மை.! பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு.!
mumbai measles attack peoples died increase
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கோவண்டியில் கடந்த மாதம் தட்டம்மை நோயால் குழந்தைகள் பலியாகி உள்ளதாக மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சுகாதாரத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினர்.
அந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது. இந்த தகவல் அறிந்த மத்திய சுகாதாரத்துறை குழு அதிகாரிகள் மும்பைக்கு வந்து நேரடியாக பரிசோதனையில் ஈடுபட்டனர். அந்த பரிசோதனையில், மும்பையில் இதுவரையில் தட்டம்மை நோயினால் 12 பேர் உயிரிழந்ததுதெரிய வந்தது.
இந்நிலையில் கடந்த 20-ந் தேதி கோவண்டி பகுதியை சேர்ந்த எட்டு மாத ஆண் குழந்தைக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த குழந்தை கடந்த 24-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதனால் மும்பையில் பலி எண்ணிக்கை 13-ஆக உயர்ந்தது. இந்த நோய்காக கஸ்தூர்பா மருத்துவமனை மற்றும் சிவாஜி நகர் மருத்துவமனையில் தற்போது 40 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நோயை தடுக்கும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் மூலம் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தை பொறுத்தவரையில் தட்டம்மை உறுதிபடுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 603 ஆக உள்ளது. இதில் மலேகாவ் பகுதியில் 62 பேருக்கும், பி வண்டியில் முப்பத்தாறு பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
mumbai measles attack peoples died increase