ரஷ்ய மொழியில் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்திற்கு ரஷ்ய மொழியில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.  

ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு ரஷிய மொழியில் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததுகுறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 16ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அழைத்த ஒருவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) என அறிமுகப்படுத்தி கொண்டு, மிரட்டல் விடுத்தது இருந்தார். அப்போது அந்த நபர் ஒரு பாடல் பாடியதாக தெரிகிறது.

கடந்த ஒரு மாதத்தில் இருமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் எனது குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2008ம் ஆண்டு, நவம்பர் 26 மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 175 பேர் உயிரிழந்ததும், 300 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தற்போது மிரட்டல் விடுத்த நபர் சொன்ன அமைப்பும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பே என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mumbai Reserve Bank Bomb threat Email


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->