இட ஒதுக்கீடு பற்றி பேசிவிட்டு திரும்பி பார்த்தேன் - என் சொந்த கட்சிக்காரர்களே தெறித்து ஓடிவிட்டனர் - வேதனையில் பிரபல அரசியல் கட்சி தலைவர்! - Seithipunal
Seithipunal


மகளிர்க்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் வட இந்தியர்களின் மனநிலை சரியில்லை !

மகாராஷ்டிராவில் புனே டாக்டர்கள் சங்கம் நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்து கொண்டார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சரத் பவார் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. பெண்களை தலைமையாக ஏற்றுக் கொள்ள நாடு இன்னும் தயாராகவில்லை. 

நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து போதும் மகளிர் இட ஒதுக்கீடு பற்றி நாடாளுமன்றத்தில் பேசினேன். நான் பேசி முடித்த பின்னர் திரும்பிப் பார்த்தால் எனது கட்சியை சேர்ந்த எம்பிகளே எழுந்து சென்றுள்ளனர். எனது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் வட இந்தியர்களின் மனநிலை சரியில்லை என தெரிகிறது. அனைத்துக் கட்சிகளும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

மகாராஷ்டிரா முதல்வராக நான் இருந்தபோது உள்ளாட்சி அமைப்பு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் கொண்டு வந்தேன். ஆரம்பக் காலத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

My party MPs behind me are missing because I talked about reservation Sarath power


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->