டெல்லியில் மியான்மர் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஆட்டோவில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியின் காலிந்திகுஞ்ச் பகுதியில் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வரும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண்ணை, மயக்க மருந்து தடவிய துணியால் முகத்தை மூடி ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கடந்த 22ஆம் தேதி ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளார். பின்பு டெல்லி-அரியானா எல்லை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் என நான்கு பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து இளம்பெண்ணை மறுநாள் ஆட்டோவில் அழைத்து வந்து டெல்லியில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து பலத்த காயமடைந்த இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இளம்பெண் கடத்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Myanmar woman gang raped in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->