பரபரப்பு! பாராளுமன்ற சுவர் மீது ஏறி உள்ளே குதித்த மர்மநபர்!
mysterious person who scaled the wall of the Parliament complex in Delhi and jumped inside was arrested
டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாக சுவரை அளவெடுத்து உள்ளே குதித்த மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இணைப்பு கட்டடத்தில் நேற்று மதியம் டீ ஷர்ட்டும் அரைக்கால் டவுசரும் அணிந்து இருந்த இளைஞர் ஒருவர் சுவரை எகிறி குதித்து உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.
திடீரென சுவர் மீது ஏறி அவர் உள்ளே குதித்ததை கண்காணிப்பு கேமராவில் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு சென்றனர்.
பின்னர் அந்த மர்ம நம்பரை போலீசார் தடுத்து சோதனை செய்தனர். அந்த நபரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் மனநல பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பின்னர் அந்த மர்ம நபரை மதிய தொழிற் பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் மணிஷ் என்பது உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பாராளுமன்றத்தில் மக்களவைக்குள் நுழைந்து மர்மநபர்கள் வண்ண புகை குண்டுகளை வீசி சென்றது பரபரப்பு ஏற்படுத்தியது. பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
mysterious person who scaled the wall of the Parliament complex in Delhi and jumped inside was arrested