மாயமான வெற்றி துரைசாமி: டி.என்.ஏ சோதனை முடிவு குறித்த அப்டேட்! - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து ரத்த கரைகள், திசுக்கள் ஆகியவை டி.என்.ஏ சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. 

இதன் முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கின்னூர் மாவட்ட ஆட்சியர் அமித் குமார் ஷர்மா தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் சட்லஜ் நதிக்கரையில் வெற்றி துரைசாமி பயணித்த கார் விபத்தில் சிக்கியது. 

இதனைத்தொடர்ந்து கார் ஓட்டுநர் சடலமாகவும் வெற்றியின் நண்பர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் வெற்றி துரைசாமி மாயமானார். இந்நிலையில் வெற்றி துரைசாமியை தேடும் பணி 7வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious Vetri Duraisamy DNA test results updates


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->