எதிர்க்கட்சிகள் இல்லாத பாஜக கூட்டணி அரசு! அடேங்கப்பா! மூன்றாவது முறையாக சாதனை! - Seithipunal
Seithipunal


நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் என்டிபிபி - பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து இருப்பதால், எதிர்கட்சிகள் இல்லாத ஆட்சி மீண்டும் அமைய உள்ளது.

60 தொகுதிகள் கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் கடந்த 2ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும் அமைய உள்ளது.

தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி - 25, 
பாஜக-12 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

என்சிபி - 7 இடங்களிலும், 
என்பிபி - 5 இடங்களிலும், 
சுயேட்சைகள் - நான்கு இடங்களிலும்
எல்ஜேபி(ராம் விலாஸ்) - 2 இடங்களிலும், 
நாகா மக்கள் முன்னணி(என்பிஎஃப்) - 2 இடங்களிலும், 
ஆர்பிஐ(அத்வாலே) - 2 இடங்களிலும், 
ஜேடி(ஐ) ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இந்த அணைத்து கட்சிகளும் தற்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) பாஜக கூட்டணிக்கு தங்களின் நிபந்தனையற்ற ஆதரவினை அளிக்க முன்வந்துள்ளன.

இதன் காரணமாக நாகாலாந்தில் கடந்த 2015 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அமைந்த எதிர்கட்சிகள் இல்லாத ஆட்சி போலவே, மீண்டும் ஒரு அனைத்துக் கட்சி ஆட்சி அமைய உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagaland All Party Govt 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->