கடந்த 5 ஆண்டுகளில் நாகாலாந்து முதலமைச்சர் சொத்து இவ்வளவு உயர்ந்துள்ளதா?!
Nagaland cm
கடந்த 5 ஆண்டுகளில் நாகாலாந்து மாநில முதலமைச்சர் நிபியூ ரியோவின் சொத்து மதிப்பு ரூ.10.54 கோடி அதிகரித்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஒரே கட்டமாக நாகாலாந்து மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவையில், தற்போது தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) ஆளும் கட்சியாக உள்ளது. இந்த கட்சியின் மூத்த தலைவர் நிபியூ ரியோ முதலமைச்சராக உள்ளார்.
இவர் வடக்கு அங்கமி-2 தொகுதியில் போட்டியிட கடந்த 6 ஆம் தேதி அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதில், சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் நிபியூ ரியோவு தனக்கு ரூ. 46.95 கோடி சொத்துகள் இருப்பதாக அதில் தெரிவித்துள்ளார். அசையும் சொத்துகள் மதிப்பு ரூ.15.99 கோடி, அசையா சொத்துகள் ரூ.30.96 கோடி என அதில் முதல்வர் நிபியூ ரியோவுகுறிப்பிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டில், நிபியூ ரியோ தனது சொத்து மதிப்பு ரூ 36.41 கோடி இருந்த நிலையில், அது கடந்த 5 ஆண்டுகளில் சொத்து மதிப்பு ரூ.10.54 கோடி அதிகரித்துள்ளது.
இதேபோல், நாகாலாந்து மாநில பாஜக தலைவரும், அலோங்டாகி தொகுதியின் வேட்பாளருமான டெம்ஜென் இம்னா அலோங் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.10.06 கோடி என்று பிரமபத்திரத்தில் தெரிவித்துள்ளார்.