10 முறை எம்எல்ஏ! பலமுறை அமைச்சர் - மூத்த அரசியல்வாதி மறைவால் பெரும் சோகம்!
Nagaland MLA Death
நாகலாந்தில் பத்து முறை எம்எல்ஏவாக இருந்த முன்னாள் அமைச்சர் நோக் வாங்னாவ் நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 87 ஆகும்.
திமாபூரில் உள்ள கிறிஸ்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோக் வாங்னாவ், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1974 ல் அரசியலில் சேர்ந்த நோக் வாங்னாவ், மோன் மாவட்டம், தபி சட்டமன்ற தொகுதியில் இருந்து 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளில் அம்மாநிலத்திற்கு சேவை செய்த நோக் வாங்னாவ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சமூக நலத்துறையின் ஆலோசகராகப் பணியாற்றி வந்தார்.
வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நோக் வாங்னாவ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திமாபூரில் அவரின் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அம்முதல்வர், துணை முதல்வர், சட்டசபை சபாநாயகர் ஷரிங்கெய்ன் லாங்குமர் மற்றும் என்டிபிபி தலைவர் உட்பட ஏராளமானவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நோக் வாங்னாவோ மறைவுக்கு ஆளுநர் இல.கணேசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர்" என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.