நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு! முதல்வர் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


நாகலாந்து சட்டப்பேரவையில், நகர்ப்புற ஊராட்சியில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. 

இது தொடர்பாக பேசிய நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ, ''உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்களின் படி நாகலாந்து நகர்புற மசோதா 2023 அறிவிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மசோதா மாநிலத்தில் உள்ள பழங்குடியின அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது தொடக்கம் தானே தவிர முடிவு அல்ல. மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் பெண்கள் பங்கேற்று செயலாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. 

கடந்த 2 தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தற்போதைய நாங்கள் வந்து புறநகர் உள்ளாட்சி மசோதா 2023 உருவாக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் தலைமையிலான 7 உறுப்பினர்களை கொண்ட தேர்வு குழு இந்த மசோதாவினை ஆய்வு செய்து பரிந்துரை செய்தது'' என தெரிவித்துள்ளார். 

கடைசியாக நாகலாந்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagaland urban local bodies reservation for women 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->